மிட்டாய் கவிதைகள்!

அவளும் பூவும்

July 23, 2013

b a bouquet of roses in heart shape

பறிக்கும் போது பூவொன்று சொன்னது,
பறித்து என்னை என்னதான் செய்வீர்?
பூவாய்நான் செடியோடே சாகிறேன் என்றது!
பைத்தியப் பூவே, என்னோடு வந்தால்
பேரழகி கூந்தலில் அடைக்கலம் என்றேன்!

இருந்த செடியிலேயே வாடிப் போனது!
ஏனென நான்கேட்க ? பூவும் சொன்னது,
உன்னவள் கண்களின் கரும்பூ இரண்டும்,
அப்புன்னகை கொண்ட பூக்கள் பலநூறும்,
என்னையே மறைத்திடும் பார்ப்போர் கண்களுக்கு!
அதுவும் சரிதானே, ஒட்டிய வெட்கம்.!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்